தலைவா!

""நரியாரே, இந்த வயல்வெளிகளை எல்லாம் கடந்து சென்றால் புளிய மரம் ஒன்று காணப்படும். அந்த புளிய மரத்தின் அடி வாரத்தில்தான் எங்களது இருப்பிடம் இருக்கிறது,'' என்றது அந்த வாத்து.
""நல்லது, நான் இப்போதே அங்கு சென்று உங்களில் ஒருவரான அந்த கொழு கொழு காரரை சாப்பிடுகிறேன். அதன் பின்னர் நாளை முதல் தொ
டர்ந்து உங்களில் ஒருவர் எனக்கு இரையாகி விட வேண்டும்,'' என்று கூறியபடி புளிய மரத்தை நோக்கிப் புறப்பட்டது. 


சிறிது நேரத்தில், நரி புளிய மரத்தை வந்தடைந்தது. நரி தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் புளிய மரத்தடியில் அமர்ந்திருந்த மேக்கா வாத்து கவனித்துவிட்டது.
"இந்த நரி எதற்காக நம் இருப்பிடத்திற்கு வருகிறது? ஒருவேளை அது நம் நண்பர்களை சந்தித்து விட்டு வருகிறதா தெரியவில்லையே....' என்று குழப்பத்தோடு நரியின் வருகையினையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது மேக்கா.
நரியும் மேக்கா வாத்தின் அருகே வந்தது.
""உன் நண்பர்கள் சொன்னபடியே நீ கொழு கொழுவென்றுதான் இருக்கிறாய். இப்போது நான் உன்னைச் சாப்பிடப் போகிறேன். நாளை முதல், தினம் ஒருவராக உன் நண்பர்களை சாப்பிடப் போகிறேன்,'' என்றது நரி.
நரியின் பேச்சில் இருந்து நம் நண்பர்கள் தான் நம்மிடம் நரியை அனுப்பி வைத்திருக்கின்றனர் என்பதை புரிந்துக் கொண்டது மேக்கா.
எப்படியாவது நரியைக் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிய மேக்கா, ""நரியே, என் உறவினர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள குட்டையில் வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லாரும் என்னை விடவும் நன்கு கொழுகொழு வென்று இருப்பர். என்னை மட்டும் நீ சாப்பிடுவதை விட அவர்கள் எல்லாரையுமே நீ சாப்பிடலாமே. அவர்கள் எல்லாருமே எனக்கு விரோதிகள். அதனால்தான் நான் அவர்களை உனக்குக் காட்டிக் கொடுக்கிறேன்,'' என்றது மேக்கா.
""என்ன... உன்னைப் போன்று ஏராளமானவர்கள் கொழுகொழுவென்று இருக்கிறார்களா? நான் அவர்களை எல்லாம் உடனடியாக சாப்பிட வேண்டும். அவர்கள் வசித்து வரும் குட்டைக்கு என்னை உடனடியாக அழைத்துச் செல்,'' என்றது நரி.
அந்த நேரம் அதன் நாக்கில் எச்சில் ஊறியிருந்தது.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வாத்தும், நரியை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு குட்டைக்குச் சென்றது.
""நரியே, என் உறவினர்கள் எல்லாருமே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வர். நாம் வருவதை தொலைவிலேயே அவர்கள் பார்த்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் குட்டை நீரில் மூழ்கி இருக்கின்றனர். இந்த குட்டையில் ஆழம் கிடையாது.
""தண்ணீரில் பாய்ந்து உன் வீரத்தைக் காட்டி என் உறவினர்களைப் பிடித்து சாப்பிடு... அந்தக் கண்கொள்ளாக் காட்சியினை நான் கரையில் நின்றபடியே பார்த்து ரசிக்கிறேன்,'' என்றது மேக்கா.
உடனே நரி ஆவேசத்துடன் குட்டை நீரில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்திலேயே சகதியில் சிக்கிக்கொண்டது. அதனால் வெளியே வர முடியவில்லை. மெல்ல, மெல்ல தான் சகதியின் உள்ளே இழுக்கப்படுவதை உணர்ந்தது. தான் விழுந்த இடம் ஒரு புதை குழி என்று அதற்கு அப்போதுதான் புரிந்தது.
""வாத்தே என்னைக் கொல்ல பெரும் சதி செய்துவிட்டாயே. என்னை ஏமாற்றித் தந்திரமாக புதைகுழியில் சிக்க வைத்து விட்டாயே,'' என்றது நரி.
""நரியே, நீ என்னையும், என் நண்பர் களையும் கொல்ல முடிவு செய்தாயே. அதற்கான தண்டனைதான் இது,'' என்று கூறியபடி தன் இருப்பிடத்திற்குக் கிளம்பியது.
நரியோ புதை குழியில் புதைந்தது. சிறிது நேரத்தில் மேக்காவை தேடிக் கொண்டு மற்ற வாத்துக்கள் எல்லாம் வந்தன.
""தலைவரே, எங்களை மன்னித்து விடுங்கள். அந்த நரியிடம் நாங்கள் சிக்கிக் கொண்டோம். அதனிடம் தந்திரமாகப் பேசி உங்களிடம் அனுப்பி வைத்தோம். நீங்கள் எப்படியும் அந்த நரியை அழித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தோம். அந்த நரி இங்கே வந்ததா?'' என்று ஆவலோடு கேட்டது ஊனமான வாத்து.
""நண்பர்களே, அந்த நரியை நான் ஒழித்து விட்டேன். இனிமேல் அந்த நரியால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை,'' என்று நடந்ததை விவரமாக எடுத்துரைத்தது மேக்கா.
அதனைக்கேட்ட மற்ற வாத்துக்கள் தங்கள் தலைவரின் அறிவைப் பாராட்டின. அதன்பின் அவைகள் தங்கள் தலைவரின் ஆலோசனையைக் கேட்டு நடந்துக் கொண்டன.

No comments:

Post a Comment